வாழ்வின் சக்தி: கிளிநொச்சியில் உலர் உணவுப்பொருட்கள் பகிர்ந்தளிப்பு

வாழ்வின் சக்தி: கிளிநொச்சியில் உலர் உணவுப்பொருட்கள் பகிர்ந்தளிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 May, 2022 | 6:54 pm

Colombo (News 1st) வாழ்வின் சக்தி திட்டம் இன்று (05) கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

LOLC குழுமம் இந்த திட்டத்துடன் கைகோர்த்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் உதவிகள் தேவைப்படுவோருக்கு உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் வகையில் வாழ்வின் சக்தி திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் இன்று மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

கிளிநொச்சி இரணை மாதா நகர், செபமாலை மாதா ஆலய வளாகத்தில் இன்று காலை உலர் உணவுப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அத்துடன், கிளிநொச்சி – பள்ளிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்திலும் உலர் உணவுப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

LOLC குழும உத்தியோகத்தர்களும் இன்று வாழ்வின் சக்தி திட்டத்தில் பங்கேற்று மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை பகிர்ந்தளித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்