படகு கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

by Staff Writer 05-05-2022 | 12:00 PM
Colombo (News 1st) பொத்துவில் - அறுகம்பை களப்பு பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(04) பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 15 முதல் 20 வயதுக்குட்பட்ட நண்பர்கள் நால்வர் நீராடுவதற்காக களப்பு பகுதிக்கு ஓடத்தில் சென்றுள்ளனர். இதன்போது, ஓடம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நீரில் மூழ்கியவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் ஏனைய மூவரும் காப்பாற்றப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொத்துவில் களப்பக்கட்டு பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே இதன்போது உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.