தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரை சந்தித்த கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள்

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரை சந்தித்த கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள்

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரை சந்தித்த கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள்

எழுத்தாளர் Staff Writer

05 May, 2022 | 10:58 am

Colombo (News 1st) கோட்டாகோகம போராட்டக்காரர்கள் சிலர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவை சந்தித்துள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வாறான நடவடிக்கை அல்லது தலையீடுகளை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பில்
ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வினவியுள்ளனர்.

நாட்டின் நிலைமை தொடர்பில் மக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக தலையிடுமாறு, போராட்டக்காரர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்