கற்பிட்டி வாகன விபத்தில் ஒருவர் பலி

கற்பிட்டி வாகன விபத்தில் ஒருவர் பலி

கற்பிட்டி வாகன விபத்தில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

05 May, 2022 | 1:59 pm

Colombo (News 1st) புத்தளம் – கற்பிட்டி பிரதான வீதியின் நரக்கள்ளி மாம்புரி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி பிரதேசத்தில் இருந்து புத்தளம் நோக்கி வந்த ஜீப் ரக வாகனமொன்றுடன் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

நேற்றிரவு(05) 7.45 மணியளவில் வீதியைக் கடக்க முற்பட்ட நிலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

புத்தளம் – மணல்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டடுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகன சாரதி கைது செய்யப்பட்டு புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாரும் புத்தளம் தலைமையகப் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்