வாழ்வின் சக்தி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு

by Staff Writer 04-05-2022 | 10:32 PM
Colombo (News 1st) நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு வாழ்வின் சக்தி திட்டத்தின் கீழ் இன்று உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. LOLC குழுமம் இந்த திட்டத்துடன் கைகோர்த்துள்ளது. வாழ்வின் சக்தி திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இன்று உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. யாழ். மயிலிட்டி வடக்கு செபமாலை மாதா ஆலயத்தில் இன்று மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. வாழ்வின் சக்தி திட்டத்துடன் கைகோர்த்துள்ள LOLC குழுமத்தின் அதிகாரிகள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் வாழ்ந்து, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இதன்போது உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இதனிடையே, வாழ்வின் சக்தியின் மற்றுமொரு திட்டம் தெல்லிப்பழை, மாவை கலட்டி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, கலைமதி, ஊரணி கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும் வாழ்வின் சக்தி திட்டத்தின் கீழ் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, சங்கிலியன் தோப்பு பகுதிகளிலும் வாழ்வின் சக்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட, நாகர் கோவில், பொக்கறுப்பு பகுதிகளை சேர்ந்த மக்களும் இன்று உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொண்டனர்.