இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு 

உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சட்டத்தரணிகள் சங்கம் 

by Staff Writer 04-05-2022 | 3:03 PM
  Colombo (News 1st) உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்திற்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு அருகே முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வலுவடைந்தமை தொடர்பாகவும் அங்கு அதிகளவிலான பொலிஸாரின் பிரசன்னம் இருந்ததாகவும் தமக்கு தகவல் கிடைத்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதற்கான முயற்சி இருக்கின்றமையும் தெரியவந்ததாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. உரிமைகளை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் தொடர்பில் இதனை விடவும் பொறுமையுடன் அதிகாரிகள் செயற்பட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு, போராட்டங்களும் அமைதியான முறையில் இடம்பெற வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதிக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலரை பொலிஸார் இன்று பிற்பகல் வேளையில் கைது செய்தனர். 10 ஆண்களும் 03 பெண்களும் பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதிக்கு அருகே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்