3 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு

இன்றும் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு

by Staff Writer 04-05-2022 | 8:53 AM
Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கியொன்று செயலிழந்துள்ளமையினால், அனல் மற்றும் நீர் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. 03 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்காமல் இருக்கும் நோக்கில் ஆணைக்குழுவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 270 மெகாவாட் மின்பிறப்பாக்கியொன்று செயலிழந்துள்ளதாக நேற்று(03) அறிவிக்கப்பட்டது. குறித்த மின்பிறப்பாக்கியை புனரமைப்பதற்கு இன்னும் 5 நாட்கள் செல்லுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார். அந்தவகையில், இன்றைய தினம்(04) A முதல் W வரையான வலயங்களில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை 02 மணித்தியாலங்களுக்கும் மாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.