சவுக்காடு கடற்கரையில் 123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

சவுக்காடு கடற்கரையில் 123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

சவுக்காடு கடற்கரையில் 123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 May, 2022 | 5:09 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – காரைநகர், சவுக்காடு கடற்கரையில் 123 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த டிங்கி படகொன்றை சோதனைக்குட்படுத்திய போது, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனையில் 15 உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில், சுமார் 492 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்