காலி முகத்திடல் மக்கள் போராட்டம் தொடர்கிறது

காலி முகத்திடல் மக்கள் போராட்டம் தொடர்கிறது

காலி முகத்திடல் மக்கள் போராட்டம் தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

04 May, 2022 | 8:42 am

Colombo (News 1st) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(04), 26 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகி நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த மக்கள் நேற்றிரவும்(03) போராட்டத்திற்கான தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவையை பதவி விலகுமாறு வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ‘மைனாகோகம’ போராட்டமும் தொடர்கின்றது.

இந்தப் போராட்டத்தில் ஒருவர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்