பா.ஜ.க தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை மன்னார் விஜயம் 

by Staff Writer 03-05-2022 | 6:00 PM
Colombo (News 1st) நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு வருகை தந்துள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை மன்னாருக்கு இன்று விஜயம் செய்தார். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை இன்று காலை மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்டார். இதனையடுத்து, இந்திய அரசின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்டு வரும் திருக்கேதீஸ்வர ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதுடன், ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இந்த விஜயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

ஏனைய செய்திகள்