நுரைச்சோலை மின்பிறப்பாக்கி செயலிழப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கி செயலிழப்பு

by Staff Writer 03-05-2022 | 6:37 PM
Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 270 மெகாவாட் மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளது. குறித்த மின்பிறப்பாக்கியை புனரமைக்க இன்னும் ஐந்து நாட்கள் செல்லுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதனால் அனல் மற்றும் நீர் மின்சாரத்தை பயன்படுத்தி மின்சார துண்டிப்பினை முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.