எரிவாயு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

தாய்லாந்திலிருந்து எரிவாயு இறக்குமதி: அமைச்சரவை அனுமதி

by Staff Writer 03-05-2022 | 10:27 AM
Colombo (News 1st) தாய்லாந்திலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிற்கு எரிவாயுவை வழங்குவதற்கு தாய்லாந்தின் சியம்(Siam) எரிவாயு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், பொறியியலாளர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். விநியோகக் கட்டணத்தில் 10 வீத குறைந்த கட்டணத்துடன் எரிவாயுவை வழங்கவும் குறித்த நிறுவனம் இணங்கியுள்ளது. எவ்வாறாயினும், சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.