குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் ஊனமுற்றோர், முதியவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு

by Staff Writer 03-05-2022 | 12:37 PM
Colombo (News 1st) குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களுக்கு 03 மாத காலத்திற்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு,  அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக உப குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் இந்த உப குழு நியமிக்கப்படவுள்ளது.