அமெரிக்க நீதிமன்றின் தரவுப்பத்திரம் கசிந்தது

கருக்கலைப்பு: அமெரிக்க நீதிமன்றின் தரவுப்பத்திரம் கசிந்தது

by Staff Writer 03-05-2022 | 11:02 AM
Colombo (News 1st) கருக்கலைப்பு தொடர்பான சட்ட ரீதியிலான உரிமைகளை இரத்து செய்வதற்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இது தொடர்பிலான தரவுகள் அடங்கிய பத்திரமொன்று கசிந்துள்ளதாக கூறப்படுகின்றது. கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கி 1973 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பு மிகத்தவறானது என நீதிபதி Samuel Alito எழுதியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கருக்கலைப்பு தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாதத்தின் முற்பகுதியில் அறிவிக்கப்படவுள்ளது.