எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த தீர்மானம்

எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த தீர்மானம்

by Staff Writer 03-05-2022 | 10:19 AM
Colombo (News 1st) ரயில்கள் ஊடான எரிபொருள் விநியோகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நாளாந்தம் 05 மில்லியன் லீட்டர் எரிபொருளை விநியோகிக்கப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தற்போது தினமும் 3.4 மில்லியன் லீட்டர் எரிபொருள் ரயில்கள் ஊடாக கொண்டுசெல்லப்படுகின்றது. ரயில்கள் ஊடான எரிபொருள் விநியோகத்தை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இன்று(03) காலை நடைபெறவுள்ளது.