அரசியல்வாதிகளை சந்திக்க மகாநாயக்க தேரர் மறுப்பு

அரசியல்வாதிகளை சந்திக்க மல்வத்து பீட மகாநாயக்க தேரர் மறுப்பு

by Staff Writer 03-05-2022 | 8:38 PM
Colombo (News 1st) நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து அரசியல் கட்சிகள் இன்னும் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டாத காரணத்தினால், அரசியல்வாதிகளுடனான சந்திப்புகளை தவிர்ப்பதற்கு சியம் மகா நிக்காய மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் நேற்று (02) தீர்மானம் மேற்கொண்டுள்ளார். தேரரை சந்திப்பதற்கு சென்றிருந்த, போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஒரு தொகுதியினர் ராஜபக்ஸக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவப் பட்டங்களை மீள பெற வேண்டும் என இன்று வலியுறுத்தினர்.