ஹெட்டிப்பொலயில் விபத்தில் சகோதரிகள் இருவர் பலி 

ஹெட்டிப்பொலயில் விபத்தில் சகோதரிகள் இருவர் பலி 

ஹெட்டிப்பொலயில் விபத்தில் சகோதரிகள் இருவர் பலி 

எழுத்தாளர் Staff Writer

03 May, 2022 | 6:59 pm

Colombo (News 1st) ஹெட்டிப்பொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 மற்றும் 9 வயதான இரண்டு சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.

லொறியொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றோடொன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (03) பிற்பகல் 02 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் தாய், தந்தை, அவர்களது 02 மகள்மார் மற்றும் 13 வயதான மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 02 சிறுமிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஏனைய மூவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாரம்மல மடிகே பகுதியை சேர்ந்த குடும்பமே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்