புதினை சந்திக்க விரும்பும் போப்பாண்டவர் 

புதினை சந்திக்க விரும்பும் போப்பாண்டவர் 

புதினை சந்திக்க விரும்பும் போப்பாண்டவர் 

எழுத்தாளர் Bella Dalima

03 May, 2022 | 4:04 pm

Colombo (News 1st) உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடைபெறுவது கொடூரமான மற்றும் புத்தியில்லாத போர் என்றும் போப்பாண்டவர் பிரான்சிஸ் பலமுறை  கண்டித்துள்ளார்.

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க  மாஸ்கோ செல்ல தயாராக உள்ளதாகவும் அதற்காக 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அங்கிருந்து இதுவரை தமக்கு பதில் வரவில்லை என குறிப்பிட்டுள்ள போப்பாண்டவர், புதின் இந்நேரத்தில் சந்திப்பை நடத்த விரும்பவில்லை போல் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில், தாம் செல்ல வேண்டிய இடம் கீவ் இல்லை, மாஸ்கோ தான் எனவும்  போப்பாண்டவர் பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்