நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வாழ்வின் சக்தி திட்டம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வாழ்வின் சக்தி திட்டம்

எழுத்தாளர் Staff Writer

03 May, 2022 | 8:46 pm

Colombo (News 1st) நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் உதவிகள் தேவைப்படுவோருக்கு உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் ‘வாழ்வின் சக்தி’ திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

LOLC குழுமம் இந்த திட்டத்துடன் கைகோர்த்துள்ளது.

இராஜகிரியவில் உள்ள LOLC தலைமையக வளாகத்தில் வாழ்வின் சக்தி அங்குரார்ப்பண நிகழ்வு LOLC குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான கபில ஜயவர்தன தலைமையில் நடைபெற்றது.

வாழ்வின் சக்தி திட்டம் நாளை (04) முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்