தென்னாபிரிக்கா, ரஷ்யாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலக்கரி

தென்னாபிரிக்கா, ரஷ்யாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலக்கரி

தென்னாபிரிக்கா, ரஷ்யாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலக்கரி

எழுத்தாளர் Staff Writer

03 May, 2022 | 9:51 am

Colombo (News 1st) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி தற்போது நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், 02 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ரூ நவமுனி குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்தே இவை கொண்டுவரப்பட்டுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இந்த நிலக்கரி போதுமானதாக இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்றைய தினம்(03) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்