அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக வழக்கு

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக வழக்கு

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக வழக்கு

எழுத்தாளர் Staff Writer

03 May, 2022 | 9:59 am

Colombo (News 1st) அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நோக்கில் இன்று(03) முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறான மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு(02) வெளியிடப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவரால் கையொப்பமிடப்பட்டு இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாக அமைந்துள்ளது.

ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் நிர்ணய விலை 260 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்