6 இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் கைது

6 இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் கைது

எழுத்தாளர் Staff Writer

02 May, 2022 | 3:40 pm

Colombo (News 1st) கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 6 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் கொடியகரை அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 பேரும் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்