by Staff Writer 02-05-2022 | 4:22 PM
Colombo (News 1st) அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் இன்று(02) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருடன் உத்தேச தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.