சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் சூட்டப்பட்ட வீதி

சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் சூட்டப்பட்ட வீதி

சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் சூட்டப்பட்ட வீதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

02 May, 2022 | 9:33 am

Colombo (News 1st) சென்னையில் நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள வீதிக்கு ”சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் விவேக்கின் மனைவி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நகைச்சுவையால் தமக்கென தனியிடம் அமைத்துக்கொண்ட நடிகர் விவேக், மக்களால் ”சின்னக் கலைவாணர்” என அழைக்கப்பட்டார்.

”சின்னக்கலைவாணர் விவேக்” கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி மாரடைப்பினால் உயிரிழந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்