உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2022 | 10:17 pm

Colombo (News 1st) இன்று(02) முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஒரு கிலோ கிராம் உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசியின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் உள்நாட்டு கீரி சம்பா அரிசியின் விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசியின் விலை 230 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்