by Staff Writer 01-05-2022 | 3:10 PM
Colombo (News 1st) மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 29 ஆவது நினைவு தினம் இன்றாகும்(01).
இதனை முன்னிட்டு இன்று(01) காலை கொழும்பு - புதுக்கடை பகுதியிலுள்ள அவரது உருவச் சிலைக்கு அருகாமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஹேமா பிரேமதாச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.