பொது போக்குவரத்து சேவையில் மாற்றமில்லை...

பொது போக்குவரத்து சேவையில் மாற்றமில்லை...

by Staff Writer 01-05-2022 | 3:14 PM
Colombo (News 1st) பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்றும்(01) வழமை போன்று முன்னெடுக்கப்படுகின்றது. கிராமிய மற்றும் தூரப் போக்குவரத்து சேவைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம நடவடிக்கைப் பிரிவு அதிகாரி ஏ.எஸ்.பீ. வீரசூரிய தெரிவித்தார். வழமையான நேர அட்டவணைக்கு ஏற்ப பஸ் ​போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்பெஸ்ட் வினவிய போது, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிருண்டா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஞாயிற்றுக்கிழமைக்கான நேர அட்டவணைக்கமைய இன்று(01) ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.