சலுகை விலையில் அரிசி விற்பனை செய்ய தீர்மானம் 

சலுகை விலையில் அரிசி விற்பனை செய்ய தீர்மானம் 

by Staff Writer 30-04-2022 | 4:04 PM
Colombo (News 1st) இந்திய கடன் வசதியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியை சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் சலுகை விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அதில் சிவப்பரிசி, நாட்டரிசி மற்றும் சம்பா அரிசியும் உள்ளடங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். சதொச ஊடாக மாத்திரம் வழங்கப்படும் அரிசியை பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்கும் பட்சத்தில் சலுகை விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியும் என பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதுவரை 7900 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கிடைத்துள்ளதுடன், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனுதவியின் கீழும் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். லிட்ரோ நிறுவனத்தை போன்று, லாஃப்ஸ் நிறுவனத்திற்கும் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் மேலும் கூறினார்.