by Staff Writer 30-04-2022 | 7:43 PM
Colombo (News 1st) விரிவுரையாளர் ஒருவரால் இரண்டு மாணவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவதை அடுத்து, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் நேற்று (29) இரவு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, குறித்த இடத்திற்கு வருகை தந்த சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளரும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் இன்று வௌியேறியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்குள் விசாரணை அறிக்கையை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.