தாய்லாந்திலிருந்து எரிவாயு கொள்வனவு: லிட்ரோ தெரிவிப்பு 

தாய்லாந்திலிருந்து எரிவாயு கொள்வனவு: லிட்ரோ தெரிவிப்பு 

தாய்லாந்திலிருந்து எரிவாயு கொள்வனவு: லிட்ரோ தெரிவிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2022 | 3:15 pm

Colombo (News 1st) தாய்லாந்திலிருந்து எரிவாயு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், தாய்லாந்திலிருந்து வருடாந்தம் மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்யவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து கொள்வனவு செய்யப்படும் ஒரு தொன் சமையல் எரிவாயுவின் விலை 95 டொலராகும்.

இதற்கு முன்னர் ஓமானிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சமையல் எரிவாயு தொன் ஒன்றுக்கு 105 அமெரிக்க டொலர் வீதம் செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதன் மூலம், தொன் ஒன்றுக்கு 10 டொலர் இலாபம் கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாய்லாந்திடமிருந்து முன்பதிவு செய்யப்பட்ட முதல் தொகை எரிவாயு, அடுத்த மாதம் நாட்டிற்கு கொண்டுவரப்படும் என லிட்ரோ நிறுவனம் மேலும் கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்