சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2022 | 4:40 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு படகொன்றில் பயணித்த 13 பேரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

5 ஆண்கள், 3 பெண்கள், 5 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேரையும் பலாலி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 5 ஆண்களில் இருவர் படகுகளில் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட நிலையில் மன்னாரில் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்