இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் இன்று (30) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு 

இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் இன்று (30) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு 

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2022 | 3:41 pm

Colombo (News 1st) எரிபொருள் விலை அதிகரிப்பிற்கேற்ப போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் இன்று (30) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் தீர்வின்றி நிறைவடைந்ததாக சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.

எரிபொருள் விலையுடன், டயர் உள்ளிட்ட வாகன உதிரிப்பாகங்களின் விலையும் 150% வரை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் தமது போக்குவரத்து கட்டணத்தை 60 வீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டது.

இன்றைய தினத்திற்குள் கட்டணத்தை அதிகரிக்காவிடின், இன்று நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகுவதாகவும் சங்கம் குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்