விவசாயிகளுக்கு நட்டஈடு கோரி  மனு தாக்கல்

விவசாயிகளுக்கு நட்டஈடு பெற்றுத்தருமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

by Staff Writer 29-04-2022 | 5:28 PM
Colombo (News 1st) இரசாயன பசளைக்கு தடை விதித்தமையால் விவசாயிகளுக்கும் விவசாய துறைக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்டஈடு பெற்றுத்தருமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எவ்வித முறையான ஆய்வுகளுமின்றி, நிபுணர்களின் ஆலோசனைகளை பெறாமல், இரசாயன உரத்திற்கு தடை விதிக்க ஜனாதிபதியினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தரணிகளான D.W. நாணயக்கார, W.D.S.சுமித் எரந்திக்க மற்றும் விவசாயி D.W. அமரதிவாகர ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித்த ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 10 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.