புரட்சிக்கான விடுதலைப் பயணம் திகாரியை அடைந்தது

by Staff Writer 29-04-2022 | 8:51 PM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புரட்சிக்கான விடுதலைப் பயணம் திகாரியை அடைந்ததது. தங்ஓவிட்ட பிரதேசத்தில் பேரணி இன்று ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். திஹாரியில் இன்று பிற்பகல் நிறைவிற்கு வந்த பேரணி நாளை யக்கலையில் இருந்து பேலியகொடை வரை பயணிக்கவுள்ளது. புரட்சிக்கான விடுதலைப் பயணம் மே முதலாம் திகதி கொழும்பை அடையவுள்ளது.