English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 Apr, 2022 | 5:28 pm
Colombo (News 1st) இரசாயன பசளைக்கு தடை விதித்தமையால் விவசாயிகளுக்கும் விவசாய துறைக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்டஈடு பெற்றுத்தருமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எவ்வித முறையான ஆய்வுகளுமின்றி, நிபுணர்களின் ஆலோசனைகளை பெறாமல், இரசாயன உரத்திற்கு தடை விதிக்க ஜனாதிபதியினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளான D.W. நாணயக்கார, W.D.S.சுமித் எரந்திக்க மற்றும் விவசாயி D.W. அமரதிவாகர ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித்த ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 10 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
30 Jun, 2022 | 04:21 PM
07 Apr, 2022 | 06:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS