இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகம் சென்ற 2 இளைஞர்கள் கைது

இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகம் சென்ற 2 இளைஞர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2022 | 8:48 pm

Colombo (News 1st) இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து படகு மூலம் அகதிகளாக சென்ற இரண்டு இளைஞர்கள் மீது சந்தேகம் அடைந்த தமிழக பொலிஸார், அவர்களை விசாரணைகளின் பின்னர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இரண்டு பேரும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளாக தஞ்சம் அடைவதற்கான எவ்வித காரணங்களும் இல்லாததாலும் மீன்பிடி படகுடன் வந்ததாலும் அவர்களை அகதிகளாக பதிவதற்கு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

குறித்த இருவருக்கும் எதிராக கடவுச்சீட்டு இன்றி வந்ததாகக் கூறி இராமநாதபுரம் – தேவிபட்டினம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்து இவர்களை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்கான விசாரணையை கடலோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இளைஞர்கள் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவவிடம் வினவிய போது, அவர்கள் தொட்பிலான தகவல்களை திரட்டி வருவதாக அவர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்