160 மொழிகளில் வெளியாகிறது அவதார் 2

160 மொழிகளில் வெளியாகிறது அவதார் 2

by Bella Dalima 27-04-2022 | 4:28 PM
'அவதார் 2' திரைப்படம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். 2 மணிநேரம் 40 நிமிடங்கள் ரசிகர்களை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றிருந்தது இத்திரைப்படம். 25 கோடி அமெரிக்க டொலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டொலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்த திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது. இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தின் 2ஆம் பாகம் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தைப் போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.