ஆங் சாங் சூகிக்கு மேலும் 5 வருட சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டு: ஆங் சாங் சூகிக்கு மேலும் 5 வருட சிறைத்தண்டனை

by Staff Writer 27-04-2022 | 11:09 AM
Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பதவி கவிழ்க்கப்பட்ட மியன்மார் நிர்வாகத் தலைவர் ஆங் சாங் சூகிக்கு (Aung Sun Suu Kyi) 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மியன்மாரின் முன்னாள் நிர்வாகத் தலைவருக்கு ஏனைய வழக்குகளின் தீர்ப்பிற்கிணங்க மொத்தமாக 11 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்டுள்ளது. எவ்வாறாயினும் அவர், மேலும் 10 ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவையனைத்திலும் தலா 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.