இன்று(27) முதல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம்

இன்று(27) முதல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம்

இன்று(27) முதல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2022 | 8:37 am

Colombo (News 1st) இன்று(27) முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம்(26) நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை(28) நாட்டை வந்தடையவுள்ளது.

இந்நிலையில், நேற்று(26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்பிரகாம்,

⭕ 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

⭕ 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 1,945 ரூபாவாக உயர்வடைந்தது.

⭕ 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 910 ரூபாவாக அதிகரித்தது.

கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் நேற்றைய தினம்(26) வரை வீட்டுப் பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்