உள்நாட்டு சீமெந்தின் விலை அதிகரிப்பு

உள்நாட்டு சீமெந்தின் விலை அதிகரிப்பு

by Staff Writer 26-04-2022 | 1:51 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியொன்றின் விலை நேற்று(25) நள்ளிரவு முதல் 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 2,850 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனிடையே, உள்நாட்டு சீமெந்து பொதியொன்றின் விலை நேற்று(25) நள்ளிரவு முதல் 400 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.