லிட்ரோ எரிவாயு விலை  4,860 ரூபாவாக அதிகரிப்பு 

லிட்ரோ எரிவாயு விலை  4,860 ரூபாவாக அதிகரிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2022 | 6:13 pm

Colombo (News 1st) இன்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் (12.5kg) விலை 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1945 ரூபாவாக அமைந்துள்ளதுடன்  2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 910 ரூபாவாக உள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 5,175 ரூபா வரை அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்தாலும், அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு அமைய அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத், தற்போதைய விலையில் எரிவாயுவை விற்பனை செய்தால் நாளாந்தம் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபா நட்டம் ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.

இதனால் விலை அதிகரிப்பை தவிர்க்க வேறு மாற்று வழியில்லை என அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்