தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்

தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2022 | 7:43 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்றிரவு சந்தித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, PLOTE தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், TELO-வின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் C.V.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung கிளிநொச்சியின் முகமாலை பகுதிக்கும் இன்று சென்றிருந்தார்.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளையும் அவர் நேரடியாக பார்வையிட்டிருந்தார்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க தூதுவருக்கு இடையிலான கலந்துரையாடலொன்றும் இன்று நடைபெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்