அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் -ஜீவன்

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் - ஜீவன் தொண்டமான்

by Staff Writer 25-04-2022 | 6:26 PM
Colombo (News 1st) விரிவான கலந்துரையாடலின் பின்னர், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். இந்த தீர்மானம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.