பிரதமர் பதவி விலக ஒரு வார கால அவகாசம் - கம்மன்பில

பிரதமர் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக உதய கம்மன்பில தெரிவிப்பு

by Staff Writer 25-04-2022 | 2:26 PM
Colombo (News 1st) பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உள்ளிட்ட 120 உறுப்பினர்களின் ஆதரவு காணப்படுவதன் காரணமாக இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று(25) பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.