இந்த வாரத்திற்குள் 7,200 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு…

இந்த வாரத்திற்குள் 7,200 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு…

இந்த வாரத்திற்குள் 7,200 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு…

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2022 | 3:08 pm

Colombo (News 1st) 7,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய இரு கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளைய தினம்(26) 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

நாளை(26) கொண்டுவரப்படும் எரிவாயு தொகையை நாளை மறுதினம்(27) முதல் சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 3,600 மெற்றிக் தென் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை மறுதினம்(27) நாட்டை வந்தடையவுள்ளது.

இதேவேளை, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதன் காரணத்தினால் நாளாந்தம் தமக்கு சுமார் 25 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்