பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

by Staff Writer 24-04-2022 | 2:40 PM
Colombo (News 1st) பெலியத்த - நிஹிலுவ பகுதியில் வீடொன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டில் வசிக்கும் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தர்ப்பத்தில் அடையாளந்தெரியாத ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.