2 இராஜாங்க அமைச்சர்கள் தொடர்ந்தும் செயற்படுவர்

பியல் நிஷாந்தவும் லொஹான் ரத்வத்தேயும் இராஜாங்க அமைச்சர்களாக தொடர்ந்தும் செயற்படுவர்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

by Staff Writer 23-04-2022 | 7:30 PM
  Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்தே ஆகியோர் தமது முந்தைய பதவிகளில் தொடர்வார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கைத்தொழில் தொடர்பான இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே தொடர்ந்தும் செயற்படவுள்ளார். இதேவேளை, மகளிர்,  சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பியல் நிஷாந்த சில்வா தொடர்ந்தும் செயற்படுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.