English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
23 Apr, 2022 | 5:15 pm
Colombo (News 1st) இந்தோனேசியா பாம் எண்ணெய் (Palm oil) ஏற்றுமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
அதிகளவில் பாம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகின்றது.
உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியை நாட்டிற்குள் மாத்திரம் பயன்படுத்தவுள்ளதாக இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ (Joko Widodo) தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் இந்த தீர்மானத்தினால் அதிகளவாக பாம் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா வெகுவாக பாதிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பாம் எண்ணெய் இந்தோனேசியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் தாவர எண்ணெய் ஆகும். அதேசமயம், கச்சா பாம் எண்ணெய் அழகுசாதனப் பொருட்கள் முதல் சொக்லட் வரை பரவலான பயன்பாடுகளுக்காக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, உக்ரைன் விவசாய சக்தியின் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து சமீபத்திய வாரங்களில் அதிக விலையை எட்டிய பல முக்கிய உணவுப் பொருட்களில் காய்கறி எண்ணெய்களும் அடங்கும்.
இந்நிலையில், இந்தோனேசியா தற்போது சமையல் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இதனால், அடுத்த வாரம் முதல் பாம் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
12 Apr, 2022 | 07:09 PM
09 Sep, 2021 | 09:22 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS