கட்டட நிர்மாண பொருட்களின் விலைகள் அதிகரிப்பு 

கட்டட நிர்மாண பொருட்களின் விலைகள் அதிகரிப்பு 

கட்டட நிர்மாண பொருட்களின் விலைகள் அதிகரிப்பு 

எழுத்தாளர் Staff Writer

23 Apr, 2022 | 3:27 pm

Colombo (News 1st) எரிபொருள் விலை அதிகரிப்பினால் கட்டட நிர்மாணத்திற்கான மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதனால் நிர்மாணப் பணிகள் 75% வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணப் பணிகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது.

ஒரு கியூப் மணலின் விலை 8000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணப் பணிகளுக்கான சங்கத்தின் தலைவர் M.D.போல் குறிப்பிட்டார்.

இரும்புக் கம்பிகளின் விலை இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கான தொழில் வாய்ப்பு இல்லாது போயுள்ளதாக M.D.போல் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்