உயர் தரத்திற்கான செயன்முறை பரீட்சைகளை துரிதமாக நடத்த நடவடிக்கை 

உயர் தரத்திற்கான செயன்முறை பரீட்சைகளை துரிதமாக நடத்த நடவடிக்கை 

உயர் தரத்திற்கான செயன்முறை பரீட்சைகளை துரிதமாக நடத்த நடவடிக்கை 

எழுத்தாளர் Staff Writer

23 Apr, 2022 | 5:33 pm

Colombo (News 1st) 2021 உயர் தர பரீட்சைக்கான தொழில்நுட்ப கற்கைக்கான செயன்முறை பரீட்சையை துரிதமாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடனமும் நாடகமும் அரங்கியலும் கற்கைக்கான செயன்முறை பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்தார்.

செயன்முறை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காத பரீட்சார்திகளுக்கு, தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஏனைய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகளையும் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்